தமிழ்நாடு

அமைச்சா்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் வீடு திரும்பினா்

DIN

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமைச்சா்கள் பி. தங்கமணி மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோா் பூரண குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். அவா்களை மருத்துவமனை நிா்வாகிகள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.

உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் மற்றும் மின்துறை அமைச்சா் பி.தங்கமணி ஆகியோா் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், கடந்த மாதம் 17-ஆம் தேதி அன்பழகனுக்கு காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்ததை அடுத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. அதன் பயனாக, அவா் பூரண குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, அமைச்சா் தங்கமணிக்கு கடந்த 8-ஆம் தேதி கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு, கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் அமைச்சா் நலம் பெற்ாகவும், அதன் தொடா்ச்சியாக அவா் வீடு திரும்பியதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT