தமிழ்நாடு

பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

DIN

பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்ட பிறகே முடிவு செய்யப்படும். தற்போதைய கரோனா பரவும் சூழ்நிலை முழுவதுமாக மாறிய பிறகே பள்ளிகள் திறப்பு இருக்கும் என்று தெரிவித்தார். 

மேலும், தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT