கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட 143 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக கே.எஸ். அழகிரி உள்பட 143 காங்கிரஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக கே.எஸ். அழகிரி உள்பட 143 காங்கிரஸார் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க முயற்சி நடப்பதாகக் கூறி, நேற்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சித்தனர். இதனால் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட சுமார் 140 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியினர் கைதை கண்டித்து பல்வேறு நகரங்களில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, தற்போது கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் உள்பட 143 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், நோய் பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.