முகப்பு
தமிழ்நாடு

தருமபுரி விவசாயி தற்கொலை விவகாரம்: உறவினர்கள் போராட்டம்

தருமபுரி அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
இண்டூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
பகிர்:

தருமபுரி அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் இண்டூர் நத்தஅள்ளி அருகே உள்ள தீர்த்தக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜா(45) .இவருக்கு மனைவி பெரியம்மா (43) இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், இவரது சொந்த நிலத்தை இண்டூர் அருகேயுள்ள மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த ரத்தினம் என்பவர் ஏமாற்றி அபகரித்து கொண்டதாகவும், எனவே தன்னுடைய நிலத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என கோரியுள்ளார். இதில் நிலம் ஒப்படைக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தன்னுடைய நிலத்தை மீட்க முடியாததால் திங்கள்கிழமை தனது வீட்டின் முன் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் இது தொடர்பாக ரத்தினம் உள்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தநிலையில், விவசாயி ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தருமபுரி- பென்னாகரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மேகலா மற்றும் காவல்துறையினர் இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து சமாதானம் அடைந்த அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக தருமபுரி - பென்னாகரம் நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →