முகப்பு
தமிழ்நாடு

புத்தடியில் ஏலக்காய் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

நறுமணப் பொருள் வாரியம் சார்பில் நடைபெறும் மின்னணு ஏல வர்த்தகத்திற்கு, ஏலக்காய் வரத்து அதிகரித்து வருவதால் விலை சரிந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

நறுமணப் பொருள் வாரியம் சார்பில் நடைபெறும் மின்னணு ஏல வர்த்தகத்திற்கு, ஏலக்காய் வரத்து அதிகரித்து வருவதால் விலை சரிந்துள்ளது. 
 
பொது முடக்கம் காரணமாக இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் நடைபெற்ற ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம், கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.  பின்னர், புத்தடியில் கடந்த மே 28-ம் தேதியும், போடியில் கடந்த ஜூன் 3-ம் தேதியும் ஏலக்காய் வர்த்தகம் மீண்டும் தொடங்கியது. பொது முடக்கத்திற்கு முன்பு கடந்த மார்ச் 19-ம் தேதி புத்தடியில் நடைபெற்ற வர்த்தகத்தில், ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.2,359.62-க்கும், உயர் தரம் கிலோ ரூ.3,198-க்கும் விற்பனையானது.  

ஏலக்காய் வர்த்தகம் மீண்டும் தொடங்கிய போது, புத்தடியில் கடந்த மே 28-ம் தேதி ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.1,769.93-க்கும், உயர் தரம் கிலோ ரூ.2,410-க்கும், போடியில் கடந்த ஜூன் 3-ம் தேதி ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.1,850.89-க்கும், உயர் தரம் கிலோ ரூ.2,573-க்கும் விற்பனையானது.  
   
இந்த நிலையில், மின்னணு வர்த்தகத்திற்கு ஏலக்காய் வரத்து அதிகரித்து வருவதாலும், ஏற்றுமதி வாய்ப்பு குறைந்துள்ளதாலும் ஏலக்காய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. புத்தடியில் கே.சி.பி.எம்.சி., ஏல நிறுவனம் மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்னணு ஏல வர்த்தகத்தில், ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.1,067.57-க்கும், உயர் தரம் கிலோ ரூ.1,700-க்கும் விற்பனையானது. 

இந்த வர்த்தகத்தில் மொத்தம் 52 ஆயிரத்து 511 கிலோ ஏலக்காய் விற்பனைக்குப் பதிவு செய்யப்பட்டு, 49 ஆயிரத்து 235கிலோ விற்பனை செய்யப்பட்டது. ஏலக்காய் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments