புதுச்சேரி மீனவர்கள் கடலில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
புதுவையில் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்காத ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து புதுச்சேரி மீனவர்கள் வெள்ளிக்கிழமை நடுக்கடலில் கருப்புக் கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவையில் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்காத ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து புதுச்சேரி மீனவர்கள் வெள்ளிக்கிழமை நடுக்கடலில் கருப்புக் கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய மாநில அரசுகள் அறிவித்த திட்டங்களை முடக்கி மீனவர்களுக்கு எதிராக செயல்படும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்தும், புதுவை மீனவர்கள் அனைவருக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ. 7,500 உடனடியாக வழங்க வேண்டும், மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு ரூ. 10,000 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் புதுச்சேரி காந்தி சிலைக்கு பின்புறம் நடுக்கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் துணை நிலை ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கருப்பு கொடிகளுடன் மீனவர்கள் கரைக்கு வராமல் தடுக்க கடற்கரையோரங்களில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.