முகப்பு
தமிழ்நாடு

தமிழக‌ அரசின் நடவடிக்கையால் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக‌ அரசின் நடவடிக்கையால் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:05 PM
பகிர்:

தமிழக‌ அரசின் நடவடிக்கையால் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நாமக்கல் சேந்தமங்கலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். உயர்கல்வித்துறை சார்பில் ரூ.7.98 கோடி மதிப்பில் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. 

அப்போது பேசிய முதல்வர், தமிழக‌ அரசின் நடவடிக்கையால் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் துறை கல்வித்துறைதான் என்றார். 

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →