பெட்ரோல், டீசல் விலை குறைவு
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 16 காசுகளும், டீசல் விலை 10 காசுகளும் குறைந்துள்ளன.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 16 காசுகளும், டீசல் விலை 10 காசுகளும் குறைந்துள்ளன.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப, எண்ணெய் நிறுவனங்கள் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் நேற்றை விட, பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது.
இதன்படி விலை 16 காசுகள் குறைந்து ரூ.74.07-க்கும், டீசல் விலை 10 காசுகள் குறைந்து ரூ.67.47-க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவது பயனாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.