முகப்பு
தமிழ்நாடு

தஞ்சாவூரில் 7 ஆட்டோக்கள் பறிமுதல்

சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சாவூரில் இயக்கப்பட்ட 7 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Updated On : 22 மார்ச், 2020 at 11:40 AM
பகிர்:

தஞ்சாவூர்: சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சாவூரில் இயக்கப்பட்ட 7 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

சுய ஊரடங்கு உத்தரவை யொட்டி சுற்றுலா பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை இயக்கக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையொட்டி தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயிலடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். 

அப்போது பயணிகள் ஏற்றி வரப்பட்ட 6 ஆட்டோக்களையும், ஒரு சரக்கு ஆட்டோவையும் அலுவலர்கள் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.