முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரத்தில் ஏரியில் மூழ்கி இருவர் பலி

விழுப்புரம் அடுத்த அன்னியூர் கிராமத்தில் ஏரியில் குளிக்கச் சென்றபோது மூழ்கி பூங்காவனம் மனைவி மல்லிகா(50) மற்றும் அவரது பேத்தி அருண் மகள் அருள்செல்வி(10) ஆகியோர் மூழ்கி உயிரிழந்தனர்.

Updated On : 27 மார்ச், 2020 at 7:11 PM
பகிர்:

விழுப்புரம் அடுத்த அன்னியூர் கிராமத்தில் ஏரியில் குளிக்கச் சென்றபோது மூழ்கி பூங்காவனம் மனைவி மல்லிகா(50) மற்றும் அவரது பேத்தி அருண் மகள் அருள்செல்வி(10) ஆகியோர் மூழ்கி உயிரிழந்தனர்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டில் இருந்து துணி துவைக்க ஏரி பகுதிக்கு சென்ற மல்லிகாவும், அவரது பேத்தியும் துணி து வைத்துள்ளனர். அப்போது அவரது பேத்தி குளிக்க முயன்ற போது 15 அடி ஆழமுள்ள தண்ணீரில் மூழ்கி உள்ளார்.

அவரை காப்பாற்ற முயன்ற மல்லிகாவும் அந்த குட்டையில் மூழ்கியதால் இருவரும் உயிரிழந்தனர். அனந்தபுரம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.