தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ. 34,728

DIN

சென்னையில் ஆபரணத்தங்கம் வெள்ளிக்கிழமை ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. ஒரு பவுனுக்கு ரூ.432 குறைந்து ரூ.34,728-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி அன்று ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதியன்று ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்து வந்தநிலையில், சென்னையில் கடந்த திங்கள்கிழமை அன்று பவுன் தங்கம் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இதன்பிறகு விலை தொடா்ந்து குறைந்து வந்தது.

இதே நிலை வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.432 குறைந்து ரூ.34,728-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.54 குறைந்து, ரூ.4,341-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.42.05 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,050 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,341

1 பவுன் தங்கம் ..................... 34,728

1 கிராம் வெள்ளி .................. 42.05

1 கிலோ வெள்ளி ................. 42,050

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,395

1 பவுன் தங்கம் ..................... 35,160

1 கிராம் வெள்ளி .................. 42.05

1 கிலோ வெள்ளி ................. 42,050

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT