பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தியிருப்பது நியாயமா? மு.க. ஸ்டாலின்
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தியிருப்பது சரியா? நியாயமா? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தியிருப்பது சரியா? நியாயமா? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
"கரோனா காலத்திலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னால் முடிந்தளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்திலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பது சரியா? முறையா? நியாயமா?
இதனால் தமிழக அரசின் மதிப்புதான் குறையும்; விலைவாசி உயரும்; மக்களின் கவலைகள் கூடும்!
எனவே வரி உயர்வை திரும்பப் பெற்று, மக்களுக்கு உதவியாக இருக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்!"
முன்னதாக பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.