கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக கடைகள் மே 6-ஆம் தேதி முதல் இயக்கலாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக கடைகள் மே 6-ஆம் தேதி முதல் இயக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக கடைகள் மே 6-ஆம் தேதி முதல் இயக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக முதல்-அமைச்சரால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிடப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே 6-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் தொழில் நிறுவனங்களுக்கு தளர்த்த உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்போது தொழில்நிறுவனங்களை இயக்கிட விதிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளை இயக்க விதிமுறைகள் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
எனவே, விதிமுறைகளின்படி பெரு நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளை இயக்க, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு mhskgi@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், பெரு நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கான வாகன அனுமதி சீட்டு பெற https:\tne-pass.tne-ga.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்லாம் என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.