திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆதார் எண் பதிவு
திருப்பூரில் தங்கி பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் வேலையின்றி தவித்து வந்தனர்
திருப்பூரில் தங்கி பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் வேலையின்றி தவித்து வந்தனர். இதனால் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கூடிய வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நேற்று முதல் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது விவரங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி இரண்டாவது நாளாக இன்று ஆதார் எண் முகவரி உள்ளிட்ட விவரங்களை பிச்சம்பாளையம் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜெய்வாபாய் பள்ளிகளில் பதிவு செய்ய முகாம் அமைக்கப்பள்ளது. இதில் தங்கள் பெயரை பதிவு செய்து சொந்த ஊருக்கு செல்ல ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர்.