முகப்பு
தமிழ்நாடு

மணப்பாறை நகராட்சி தூய்மை காவலர்களுக்கு யோகா பயிற்சி

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து தொய்வின்றி பணியாற்றி வரும் தூய்மை காவலர்கள், தொடர்ந்து பணியாற்றி வரும் சூழலில் அவர்களுக்கு

Updated On : 5 மே, 2020 at 10:48 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:05 PM

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து தொய்வின்றி பணியாற்றி வரும் தூய்மை காவலர்கள், தொடர்ந்து பணியாற்றி வரும் சூழலில் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கவும், ஆரோக்கியம் காக்கவும் நகராட்சி தூய்மை காவலர்களுக்கு சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

இன்று தனியார் பள்ளி ஒன்றில் அளிக்கப்பட்ட யோகா பயிற்சியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவ பிரிவு சார்பில் யோக பயிற்சியாளர் இளஞ்செழியன் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சியளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு மூச்சு பயிற்சிகளை கற்றுக்கொண்டனர். 

இதன் மூலம் தூய்மை காவலர்கள் தொடர்ந்து களப்பணியாற்றும்போது புத்துணர்வோடு பணியாற்றி வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர்(பொ) சுப்பிரமணியன் மற்றும் சுகாதார அலுவலர் நெடுமாறன் ஆகியோர் செய்தியிருந்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.