கடலூரில் டோக்கன் விநியோகித்து கடைசிநேர மது விற்பனை
கடலூர் மாவட்டத்தில் இன்று 134 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை காலை 10 மணி முதலே நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் இன்று 134 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை காலை 10 மணி முதலே நடைபெற்றது. நீண்ட வரிசையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில் கடலூர் பேருந்து நிலையம் அருகில் அருகருகே அமைந்துள்ள இரண்டு கடைகளில் மாலை 5 மணிக்கு கடை அடைக்கப்படும் என்பதால் 4.45 மணிக்கு கடைசியாக இருந்தவர்களில் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது.
மீதமிருந்த சுமார் 100 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்