மேலூர் அருகே குளத்தில் இளைஞர் சடலம்; குளக்கரையில் இறந்து கிடந்த வாத்துகள்
மேலூர் அருகே குளத்தில் கிடந்த இளைஞர் சடலம் குறித்து மேலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:08 PM
மேலூர் அருகே குளத்தில் கிடந்த இளைஞர் சடலம் குறித்து மேலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலூர் திருச்சி சாலையில் உள்ள சாலக்கிபட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலம் முகத்தில் காயங்களுடன் நீரில் மிதந்தது புதன் கிழமை தெரியவந்தது.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த மேலூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், குளக்கரை பகுதியில் 30க்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறந்து கிடந்தன. இதுகுறித்து மேலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement