முகப்பு
தமிழ்நாடு

அண்ணாமலைப் பல்கலையில் மே 18 முதல் 50 சதவீத ஊழியர்கள் பணிபுரிய உத்தரவு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் வருகிற 18.05.2020 திங்கள் கிழமை முதல் தமிழக அரசின் உத்தரவுப் படி பல்கலைக்கழக துறைகள்..

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் வருகிற 18.05.2020 திங்கள் கிழமை முதல் தமிழக அரசின் உத்தரவுப் படி பல்கலைக்கழக துறைகள் மற்றும் அலுவலகங்களிலும் 50% சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும் எனப் பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பல்கலைக்கழகத்தின் அனைத்து  அலுவலகங்களிலும் ஊழியர்களை 2 குழுக்களாகப் பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் 6 நாட்களும் பணியாற்றப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வே.முருகேசன் மற்றும் பதிவாளர் என்.கிருஷ்ண மோகன்  ஆகியோர் ஆணை பிறப்பித்துள்ளது. 

மேலும் அனைத்து அலுவலகங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் வாரத்தின் 6 நாட்களும் பணியாற்ற வேண்டும். சுழற்சி முறையிலான பணியின் போது வீட்டில் இருக்கும் ஊழியர்கள் எலக்ட்ரானிக் முறையில் அலுவலகத்தில் தொடர்பில் இருக்க வேண்டும் எனப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.