தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கரோனா தொற்று

DIN


தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்டவை அடங்கிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் பாதித்தோரின் எண்ணிக்கை 601. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோர் 87. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 552 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,672 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 3 பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மட்டும் 489 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,895 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் 7,466 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 9,844 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 3,32,352 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

SCROLL FOR NEXT