தமிழ்நாடு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல்

DIN

சேலத்தில் மாவட்டம் ஆத்தூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் இன்று துவக்கி வைத்தார். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 33 வார்டுகள் கொண்டது. இங்கு தமிழக அரசின் ஆணைப்படி கரோனா நோய் தாக்குதலை கட்டுப்படுத்த சித்த மருத்துவம் கபசுரக் குடிநீரை அனைத்து வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கும் திட்டத்தை ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் என்.ஸ்ரீதேவி துவக்கி வைத்தார்.

அவருடன் துப்புரவு அலுவலர் என்.திருமூர்த்தி சுகாதார ஆய்வாளர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் 220 தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டது. நகராட்சி அனைத்து வார்டுகளுக்கும் வழங்க இருப்பதாக ஆணையாளர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT