விமானப் பயணத்துக்கு இ-பாஸ் கட்டாயம்: தமிழக அரசு
வெளி மாநிலங்களிலிருந்து விமானப் பயணம் மூலம் தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
வெளிமாநிலங்களிலிருந்து விமானப் பயணம் மூலம் தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் நாளை (திங்கள்கிழமை) உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை தொடங்குகிறது. வெளிமாநிலங்களிலிருந்து விமானப் பயணம் மூலம் தமிழகம் வருவோருக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு இன்று வெளியிட்டிருந்தது.
அதன்படி, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் நபர்கள் TNepass இணையதளத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும், தமிழகத்துக்கு வரும் சூழ்நிலையில், விமான நிலையத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், சளி, இருமல் போன்ற கரோனா அறிகுறிகள் இருந்தால் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். அறிகுறிகள் இல்லாதவர்கள் 14 நாள்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவை அந்த வழிகாட்டுதலில் இடம்பெற்றிருந்ததன.
இந்த நிலையில், வெளிமாநிலங்களிலிருந்து விமானப் பயணம் மூலம் தமிழகம் வருவோர் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.