முகப்பு
தமிழ்நாடு

திருப்பூரில் மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தத் தொழிலாளி பலி

திருப்பூர் குமார் நகர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
கோப்புப் படம்
பகிர்:

திருப்பூர் குமார் நகர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

திருப்பூர், பி.என்.சாலையில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் எஸ்.விவிதன்(31), இவருக்கு திருமணமாகி அபிராமி என்கிற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். விவிதன் திருப்பூர் மின்வாரியத்தில் 10 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், திருப்பூர் குமார் நகரில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள மின்கம்பத்தில் புதன்கிழமை மாலை பழுதை சரி செய்யச்சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் விவிதன் பலத்த காயமடைந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்தாகத் தெரிவித்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.