ஆழியாறு அணையிலிருந்து 6-ம் தேதி முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு
பாசனத்துக்கு நவம்பர் 6 முதல் நவம்பர் 15-ம் தேதி முடிய 160 நாள்களுக்கு, ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: பாசனத்துக்கு நவம்பர் 6 முதல் நவம்பர் 15-ம் தேதி முடிய 160 நாள்களுக்கு, ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம்போக பாசனத்திற்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி ஆனைமலை வட்டார ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நலச் சங்கம் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
இதையும் படிக்கலாம்.. பாபா கா தாபா: விடியோ பதிவிட்டவர் மீது பணமோசடி புகார் அளித்த முதியவர்
வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஐந்து வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம்போக பாசனத்திற்கு நவம்பர் 6 முதல் நவம்பர் 15-ம் தேதி முடிய 160 நாள்களுக்கு, ஆழியாறு அணையிலிருந்து 1,137 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.
இதையும் படிக்கலாமே.. லடாக்: 16,000 அடி உயரத்தில் உறையும் பனியில் வீரருக்கு அறுவை சிகிச்சை
இதனால் கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.