முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் நவ. 23ல் தொடங்கும்: அண்ணா பல்கலை
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் இணைப்புக் கல்லூரிகளில் சேரும் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் 23-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் இணைப்புக் கல்லூரிகளில் சேரும் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் 23-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
2020 - 21-ஆம் கல்வியாண்டுக்கான அட்டவணையை திருத்தி வெளியிட்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் படிப்பில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 23-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் பருவம் என்பது 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி வரை வகுப்புகள் நடத்தப்படும். இதையடுத்து மார்ச் 8-ம் தேதி முதல் பருவத் தேர்வுகள் தொடங்கும்.
இதையும் படிக்கலாமே.. லடாக்: 16,000 அடி உயரத்தில் உறையும் பனியில் வீரருக்கு அறுவை சிகிச்சை
இரண்டாவது பருவத்துக்கான வகுப்புகள் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கும் பள்ளி மற்றும் கல்வி நிலையங்களை நவம்பர் 16-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.