5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: பேரிடர் மேலாண்மை ஆணையம்
தமிழகத்தில் கோவை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கோவை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தகவலில்,
தமிழகத்தின் மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது என்று தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.