திண்டிவனம் அருகே நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்
கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு சென்ற கார் திண்டிவனம் அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடுதிண்டிவனம் அருகே நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்
கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு சென்ற கார் திண்டிவனம் அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு சென்ற கார் திண்டிவனம் அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் ஷேக் இப்ராகிம் (30). இவர் சென்னையிலிருந்து உறவினர் திருமணத்திற்காக ஸ்கார்பியோ காரில் கோயம்புத்தூருக்கு சென்றுள்ளார். பின்னர் திருமண நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
காரை ஷேக் இப்ராஹிம் ஓட்டி வந்தார். இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 9 பேர் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு அருகே சின்ன நெற்குணம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது காரின் இன்ஜின் பகுதியில் இருந்து அதிகளவில் புகை வந்ததால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கினர்.
பின்னர், சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
அருகிலிருந்தவர்கள் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்தது.
இந்த விபத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.