மக்களின் நலன் கருதி வேல் யாத்திரையை பாஜக கைவிட வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
மக்களின் நலன் கருதி வேல் யாத்திரையை பாஜக கைவிட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலன் கருதி வேல் யாத்திரையை பாஜக கைவிட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,
பாஜகவின் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கரோனா அதிகம் பரவ வாய்ப்புள்ளது. வேல் யாத்திரை மூலம் மக்களுக்கு கரோனா ஏற்படும் அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டே தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை.
சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும். மக்களின் நலன் கருதி பாஜக வேல் யாத்திரையை கைவிடுவது நல்லது. சட்டத்தை மீறினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.