முகப்பு
தமிழ்நாடு

எல்.முருகன் உள்பட 508 பேர் மீது வழக்குப்பதிவு

திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்றதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 508 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு

எல்.முருகன் உள்பட 508 பேர் மீது வழக்குப்பதிவு

திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்றதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 508 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
பகிர்:

திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்றதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 508 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மாநில பாஜக தலைவர் முருகன் திருத்தணி முருகன் கோயிலிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோயில் வரை வெள்ளிக்கிழமை வெற்றிவேல் யாத்திரை நடத்தப்படும் என அறிவித்திருந்தார். கரோனா தொற்று காரணமாக யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை திருத்தணி வந்த பாஜக தலைவர் முருகன் மலைக்கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டுவிட்டு வெற்றிவேல் யாத்திரையைத் தொடங்கி வைத்தார். 

உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்பட பலர் இருந்தனர். இதையடுத்து, பாஜக தலைவர் முருகன் உட்பட முக்கியத்தலைவர் என 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்றதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 508 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தடையை மீறி யாத்திரை, அனுமதியின்றி கூட்டம் கூடியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
முழு கட்டுரையைப் படிக்க →