முகப்பு
தமிழ்நாடு

கூத்தாநல்லூரில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க ஓய்வுபெற்ற பணியாளர்கள் நலச் சங்கம் தொடக்கம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்கள் நலச் சங்கம் தொடங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
உறுப்பினர் படிவத்தை வழங்குகிறார் மாவட்டத் தலைவர்.
பகிர்:

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்கள் நலச் சங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்திற்கான கிளையும், மாவட்ட நிர்வாகிகளின் தேர்வும் நடைபெற்றன. கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, டாக்பியா மாவட்டத் தலைவர் வி.எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தார். போராட்டக்குழுத் தலைவர் எஸ்.அய்யப்பன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், நியமனம் செய்யப்பட்ட திருவாரூர் மாவட்ட அளவிலான புதிய நிர்வாகிகளாக, மாவட்டத் தலைவர் ஜி.குப்புசாமி, மாவட்டச் செயலாளர் எம்.ஜெயராமன், மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.சிவஞானம், ஜி.துரைராஜ், இணைச் செயலாளர்கள் எஸ்.அன்பழகன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொருளாளர் டி.எம்.தங்கராசு உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, அனைத்து ஓய்வு பெற்ற பணியாளர்களையும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஓய்வு ஊதிய நிலுவைத் தொகையை பெற்றுத் தருவது, ஓய்வு ஊதியம் பெற்றுத் தருவது, மாவட்ட அளவில் பேரவைக் கூட்டம் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அமைச்சர் துரைக்கண்ணு, ஒட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் மணி உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, கூட்டத்தில் உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட்டன. நிறைவாக, மாவட்டத் தலைவர் ஜி.குப்புசாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.