தீபாவளியை முன்னிட்டு தி.நகரில் பாதுகாப்பு திட்டங்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி, தி.நகரில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இன்று துவக்கி வைத்தார்.
தமிழ்நாடுதீபாவளியை முன்னிட்டு தி.நகரில் பாதுகாப்பு திட்டங்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி, தி.நகரில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இன்று துவக்கி வைத்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, தி.நகரில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இன்று துவக்கி வைத்தார்.
வருகிற 14.11.2020 அன்று தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் பொதுமக்கள் துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பெருமளவு கூடுவார்கள். அதன்பேரில், சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றான தி.நகர் பகுதியில் அதிகளவு பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவுப்படி தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, மாம்பலம் ரயில் நிலையம். பாண்டிபஜார் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, தியாகராய நகர் பகுதியில், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு பாதுகாப்பு சேவை திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் இன்று துவக்கி துவக்கிவைத்து பார்வையிட்டார்.
பொதுமக்களுக்கு உதவிட, மாம்பலம் மற்றும் பாண்டிபஜார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த காவல் உதவி மையங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். இந்த காவல் உதவி மையங்களில் காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை கண்காணித்து, குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பர்.
மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளில் கண்காணிக்க ட்ரோன் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் திட்டத்தை ரிமோட் மூலம் துவக்கி வைத்தும், கரோனா தடுப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ராட்சத பலூனை ரிமோட் மூலம் துவக்கி வைத்தார்.
பொருள்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகளை திருடப்படாமல் தடுக்க கழுத்து துணி கவசங்களை பெண்களுக்கு வழங்கி, பெண்களின் கழுத்தில் அணிவித்திட நியமிக்கப்பட்ட பெண் காவல் ஆளிநர்களுக்கு, குற்றத் தடுப்பு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கினார்.
தற்காலிக கட்டுப்பாட்டறைகளுடன், உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, பைனாகுலர் மூலம் குற்றச் செயலில் ஈடுபடுவோரை கண்காணிக்கவும், காவல்துறையின் குற்றத்தடுப்பு மற்றும் கரோனா தடுப்பு விழிப்புணர்வுகள் ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டதை பார்வையிட்டும், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள சீருடையில் உள்ள காவல் குழுவினரை, குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்க அறிவுரைகள் கூறியும், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் ஆளிநர்கள் தி.நகர் பகுதியில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், காவல் ஆணையாளர் அவர்கள் காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், தி.நகர், உஸ்மான் சாலை, பாண்டி பஜார் ஆகிய பகுதிகளில் நடந்து சென்று உயரதிகாரிகளுடன் பொதுமக்கள் மத்தியில் கொரானா தடுப்பு விழிப்புணர்வுகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், திரவ சுத்திகரிப்பான் பயன்படுத்துதல் குறித்து பிரசுரங்கள் வழங்கியும், பொதுமக்கள் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடிட சென்னை பெருநகர காவல்துறை உடனிருக்கும் என்று தெரிவித்தார்.