2வது நாளாக வேல் யாத்திரை: எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது
சென்னை திருவொற்றியூரிலிருந்து கோயம்பேடு வரை வேல் யாத்திரை நடத்த முயன்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்பட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாடு2வது நாளாக வேல் யாத்திரை: எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது
சென்னை திருவொற்றியூரிலிருந்து கோயம்பேடு வரை வேல் யாத்திரை நடத்த முயன்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்பட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூரிலிருந்து கோயம்பேடு வரை வேல் யாத்திரை நடத்த முயன்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்பட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
எத்தனை தடைகள் வந்ததாலும் வேல் யாத்திரை வெற்றி பெறும் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக சார்பில் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த முயன்ற எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரை காவல்துறையினர் நேற்று (சனிக்கிழமை) கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.
இதனிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருவொற்றியூரிலிருந்து கோயம்பேடு வரை இரண்டாவது நாளாக வேல் யாத்திரை நடத்த தமிழக பாஜகவினர் திட்டமிட்டனர்.
அதன்படி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து வேல்யாத்திரை தொடங்கியது. ஆனால் காவல்துறையின் உத்தரவை மீறி நடந்ததால், காவலர்கள் அவர்களை கைது செய்தனர்.
இதில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், பாஜக மூத்தத் தலைவர் இல. கணேசன் உள்ளிட்ட
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், எத்தனைத் தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை நடைபெறும். புனிதத் தலங்கள் உள்ள அனைத்து இடங்களுக்கும் வேல் யாத்திரை செல்லும் என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும், தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக இருக்கும் என்றும் தெரிவித்தார்.