அமெரிக்க பணிக்குழுவுக்குத் தேர்வான இந்திய மருத்துவர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து
அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கரோனா மருத்துவக்குழுவில் இடம்பெற்ற இந்திய மருத்துவர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கரோனா மருத்துவக்குழுவில் இடம்பெற்ற இந்திய மருத்துவர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கரோனா தடுப்பு குறித்து ஆலோசனை வழங்குவதற்கு ஜோ பைடன் அமைத்துள்ள குழுவில் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் விவேக்மூர்த்தி மற்றும் செலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனாவுக்கு எதிரான அமெரிக்காவின் பணிக்குழுவில் மருத்துவர் விவேக் மூர்த்தி மற்றும் செலின் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளனர். மருத்துவர் செலினுக்கு தமிழ் பாரம்பரியம் இருப்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், மருத்துவர்கள் இருவருக்கும் தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.