தமிழ்நாடு

விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு:  கீதாஜீவன் எம்எல்ஏ மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு 

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டததால் அங்கு பரபரப்பு நிலவியது. 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி சாலையில் உள்ள பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வரும் போது அங்கு உள்ள சிறிய அளவிலான விநாயகர் கோவிலை இடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிமை காலை ஈடுபட்டனர். 

இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

பின்னர் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT