தமிழ்நாடு

அரியர் தேர்வு விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை: தமிழக அரசு

DIN


சென்னை: பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் வைத்திருந்த அரியர் தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்த வழக்கில், தமிழக உயர்கல்வித் துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பதில் மனுவில், அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக் கழகங்களுக்கு அதிகாரம் உள்ளது.  பல்கலைக்கழகங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததில், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிரானதாக எதுவும் நடக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கலை-அறிவியல், பொறியியல், எம்சிஏ படிப்புகளில் அரியர் பாடங்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி,   ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு, பல்கலைகழக மானிய குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தாக்கல் செய்த பதில்மனுவில், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது என தெரிவித்திருந்தது. 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என  கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாள்களுக்கு முன்பு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், பல்கலைக்கழகத்தின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. ஜோ பைடன் 78!

முன்னதாக, கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள கோரி சில மாணவர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கவுன்சிலின் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். 

மேலும் அரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு ஆதரவாக வழக்கு தொடரும் மாணவர்களின் மொத்த அரியர் எண்ணிக்கை, 10 -ஆம் வகுப்பு முதல் அந்த மாணவர்களின் கல்வி தேர்ச்சி விவரங்கள் கேட்கப்படும் என எச்சரித்தனர். பொறியியல் படித்தவர்கள் "ஜொமாட்டோ' உள்ளிட்ட ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களில் பணியாற்றுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் என கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT