முகப்பு
தமிழ்நாடு

காரைக்கால் துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் 

நிவர் புயல் உருவானதையொட்டி காரைக்கால் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
காரைக்கால் துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் 
பகிர்:


காரைக்கால்:  நிவர் புயல் உருவானதையொட்டி காரைக்கால் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை பிற்பகல்  கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின்பேரில்,  காரைக்கால் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

காரைக்கால் பகுதியில் காலை முதல் லேசான காற்றும், மழையும் இருந்துகொண்டிருக்கிறது. கடல் சீற்றமாக காணப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →