முகப்பு
தமிழ்நாடு

நெல்லை அருகே காவல்துறையை கண்டித்து பெண் தற்கொலை

திருநெல்வேலி அருகே உள்ள சுத்தமல்லியில் காவல்துறையை கண்டித்து பெண் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
நெல்லை அருகே காவல்துறையைக் கண்டித்து பெண் தற்கொலை
பகிர்:


திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே உள்ள சுத்தமல்லியில் காவல்துறையை கண்டித்து பெண் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்தார்.

சுத்தமல்லி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மனைவி சகுந்தலா(45). கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சத்யா தனது 2 மகன்கள், ஒரு மகளுடன் தனியாக வசித்து வந்தார். இவரது மூன்றாவது மகன் பிரதீபை ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறி சுத்தமல்லி காவலர்கள் திங்கள்கிழமை அழைத்துச் சென்றனர். 

தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலையில் வீட்டுக்கு வந்த காவலர்கள் பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வீட்டில் பதுங்கி வைத்திருந்த மடிக்கணினியை பறிமுதல் செய்ய வந்துள்ளதாகவும் தெரிவித்தனராம். பின்னர் மற்றொரு மகன் பிரசாத்தையும. விசாரணைக்காக  காவலர்கள் அழைத்துச் செல்ல தயாரானபோது, காவலர்கள் தனது குடும்பத்தினரை தேவையில்லாமல் விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்துவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். 

பின்னர் சகுந்தலா வீட்டின் கதவை பூட்டி தீக்குளித்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவலர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தகவல் அறிந்ததும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சுத்தமல்லி காவல் நிலையத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சத்யா நகரை சேர்ந்த பிரதீப் கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டார். 

தொடர்ந்து அவர்களிடமிருந்து நகை, பணம், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை காவலர்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தனர். காவலர்கள் விசாரணையை முடித்து புறப்படும்போது சகுந்தலா தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →