விழுப்புரம் மாவட்டத்தில் எ.சி.ஆர். சாலையில் புதுச்சேரிக்கு செல்ல முடியாத வகையில் போக்குவரத்தை தடை செய்ய சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகள். 
தமிழ்நாடு

நிவர் புயல் எதிரொலி: விழுப்புரம் மாவட்டத்தில் ஈ.சி.ஆர். சாலை மூடல்

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

DIN

நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

இதனால் பாதுகாப்பற்ற இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்த்து வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மூடப்பட்ட அனுமந்தை சுங்கச்சாவடி. 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கடற்கரைப் பகுதியில் உள்ள ஈ.சி.ஆர். சாலை மூடப்பட்டுள்ளது. குறிப்பாக புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் நுழையும் சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை சுங்கச்சாவடி மூடப்பட்டது. அந்த வழியாக சென்னை மார்க்கத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்குள் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT