தமிழ்நாடு

பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும்: மத்திய ஜல்சக்தி துறை எச்சரிக்கை

DIN

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று மத்திய ஜல்சக்தி துறை மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று நாளை அதிகாலை அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் செவ்வாய் காலை துவங்கி தொடர்மழை பெய்து வருகிறது.

அதேநேரம் அதி தீவிர புயலாக மாறிய நிவர் தற்போது 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது என்று  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று மத்திய ஜல்சக்தி துறை மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஜல்சக்தி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆந்திராவின் சித்தூர் நகரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், கண்டிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT