மயிலாப்பூர், சோழிங்கநல்லூரில் பெய்த கனமழை
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான அதி தீவிர நிவர் புயலானது தமிழகம் - புதுச்சேரிக்கு இடையே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று காலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது.
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான அதி தீவிர நிவர் புயலானது தமிழகம் - புதுச்சேரிக்கு இடையே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று காலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது.
பிறகு அது தீவிரப் புயலாக வலுகுறைந்து, வடக்கு வடமேற்காக தரைப் பகுதியில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுகுறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நிவர் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் கடலோரப் பகுதிகளில் கனமழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. 26/11 நினைவுநாள்: கசாப்பின் தண்டனையை உறுதி செய்த துணிச்சலான சிறுமி
அதிகபட்சமாக மயிலாப்பூரில் 263.60 மி.மீ. மழையும், சோழிங்கநல்லூரில் 220 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையிலேயே கடந்த 24 மணி நேரத்தில் பெய்திருக்கும் அதிகபட்ச மழையளவாக இது கருதப்படுகிறது.
இதையடுத்து, அம்பத்துரில் 150 மி.மீ. மழையும், கிண்டியில் 139 மி.மீ. மழையும், மாம்பலத்தில் 135 மி.மீ. மழையும், பதிவாகியுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் சென்னையில் செய்திருக்கும் மழையளவு 1497 மி.மீ. ஆகும். ஆனால் சராசரி மழையளவு 136.15 மி.மீ. ஆகும்.