முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,442 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,442 பேருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 நவம்பர், 2020 at 7:00 PM
தமிழகத்தில் மேலும் 1,442 பேருக்கு கரோனா
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

சென்னை: தமிழகத்தில் புதிதாக 1,442 பேருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநிலத்தில் புதிதாக 1,442 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,494 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர். 

Advertisement

இதுவரை மொத்தம் 7,54,826 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 11,681 பேர் பலியாகியுள்ளனர். 

சென்னையில் 392 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 2,14,191-ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,924 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 35 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 3,838-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.