வேளாண் சட்டம் என்பது ஒரு சீர்திருத்த முயற்சி: நிர்மலா சீதாராமன் விளக்கம் 
தமிழ்நாடு

வேளாண் சட்டம் என்பது ஒரு சீர்திருத்த முயற்சி: நிர்மலா சீதாராமன் விளக்கம்

வேளாண் சட்டத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. உற்பத்தியாளர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. வேளாண் சட்டம் கொண்டுவந்திருப்பது ஒரு சீர்திருத்த முயற்சி என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார

DIN

வேளாண் சட்டத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. உற்பத்தியாளர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. வேளாண் சட்டம் கொண்டுவந்திருப்பது ஒரு சீர்திருத்த முயற்சி என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, வேளாண் விளைபொருட்களை விளைவித்த விவசாயிக்கு, வேளாண் சட்டங்கள் மூலம் முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையே விவசாயப் பொருள்களை விற்பனை செய்யலாம். மாநில வேளாண் சந்தைகள் மாற்றப்படவில்லை.

எவ்வளவு பொருள்களை, எவ்வளவு விலைக்கு, யாரிடம் விற்பனை செய்வது என்பதை விவசாயிகளே முடிவு செய்யலாம். வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் கொண்டு வந்திருப்பது ஒரு சீர்திருத்த முயற்சியே. விவசாயிகள் மீது விதிக்கப்பட்ட 8 முதல் 8.5 சதவீத வரி இனி இருக்காது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

SCROLL FOR NEXT