பரபரப்பாகும் அரசியல்: ஓ. பன்னீர்செல்வத்துடன் முக்கிய அமைச்சர்கள் சந்திப்பு
தமிழக அரசியலில் பரபரப்பு சூழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் முக்கிய அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாடுபரபரப்பாகும் அரசியல்: ஓ. பன்னீர்செல்வத்துடன் முக்கிய அமைச்சர்கள் சந்திப்பு
தமிழக அரசியலில் பரபரப்பு சூழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் முக்கிய அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பு சூழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் முக்கிய அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்துள்ளார்.
அதே வேளை, முதல்வர் பழனிசாமி, தனது இல்லத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட சில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்வரும், துணை முதல்வரும் தங்களது இல்லங்களில் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நாளை முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்திருக்கும் வேளையில், அதிமுகவின் 11 பேர் கொண்ட குழு அறிவிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.