தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவியை ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

சென்னை: கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு கடத்திச் சென்ற, தனது மகளை மீட்டுத்தரக் கோரிய வழக்கில் மணப்பெண் சௌந்தர்யாவை நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தியாகதுருகத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், எனது மகள்  சௌந்தர்யா, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை  இரண்டாம் ஆண்டு படித்து வந்தாள். என்னுடைய மகளை கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு ஆசைவார்த்தைகள் கூறி,  கடத்தி உள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக எனக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது.  எனவே, மாயமான எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படாததால் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் முன் மீண்டும் முறையிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சௌந்தர்யா மற்றும் தந்தை சுவாமிநாதன் ஆகியோரை வெள்ளிக்கிழமை (அக்.9) ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT