தொல்லியல் படிப்பில் தமிழ் சேர்ப்பு: மு.க. ஸ்டாலின் வரவேற்பு
தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழியை சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழியை சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்திற்குப் பிறகு தமிழ் இணைக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கிறேன்! மொழிகளே, பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள்! இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்' என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய தொல்லியல் துறை சாா்பில் உத்தரப்பிரதேசத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்புக்கான கல்வித் தகுதியில் செம்மொழியான தமிழ் மொழி சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு எதிர்ப்பு எழுந்தது. கல்வித்தகுதியில் தமிழை சேர்க்கக்கோரி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழியை சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.