முகப்பு
தமிழ்நாடு

திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கக் குழு அமைப்பு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குழு ஒன்றை அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குழு ஒன்றை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் பதவிக்காலம் 2021-ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனையடுத்து தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்காக ஏழு மாதங்களே உள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன.

அந்தவகையில் திமுகவில் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கான குழுவை அக்கட்சியில் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அதன்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப்பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், மக்களவை உறுப்பினர் கனிமொழி, கொள்கைப் பரப்பு செயலாளர் திருச்சி சிவா, செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →