வரும் தேர்தலில் திமுகவுக்கு தற்போதுள்ள பலத்தில் 1 பங்கு இடங்கள் கூட கிடைக்காது: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு தற்போதுள்ள பலத்தில் 1 பங்கு இடங்கள் கூட கிடைக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் : தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு தற்போதுள்ள பலத்தில் 1 பங்கு இடங்கள் கூட கிடைக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக உள்ளது. எங்கள் தலைமையில் கூட்டணி இல்லை.
அடுத்த ஆண்டு அமையும் தமிழக ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும். எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருக்கும்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு தற்போதுள்ள பலத்தில் 3-இல் 1 பங்கு கிடைத்தால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தேர்வு சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது. அவர்கள் பிளவுபட வேண்டும் என்று சிலர் நினைத்தார்கள். ஆடு மோதினால் ரத்தம் குடிக்கலாம் என்று ஓநாய் காத்திருந்ததை போல் சிலர் காத்திருந்தனர். அவர்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சி செய்த தவறுகளை மோடி தலைமையிலான மத்திய அரசு சரி செய்து வருகிறது என்று பொன்.ராதிகிருஷ்ணன் கூறினார்.