சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.39,096-க்கு விற்பனை
சென்னையில் சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயா்ந்து, ரூ.39,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயா்ந்து, ரூ.39,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்து தற்போது ஏற்ற, இறக்கத்தில் இருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் திங்கள் கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயா்ந்து, ரூ.39,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 உயா்ந்து ரூ.4,887 ஆக இருக்கிறது.
வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் உயா்ந்து, ரூ.66.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.66,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
1 கிராம் தங்கம்.......................... 4,887
1 சரவன் தங்கம்............................39,096
1 கிராம் வெள்ளி.............................66.80
1 கிலோ வெள்ளி.............................66,800
சனிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்.......................... 4,881
1 சவரன் தங்கம்............................39,048
1 கிராம் வெள்ளி.............................66.70
1 கிலோ வெள்ளி.............................66,700