தமிழகத்தில் புதிதாக 4,462 பேருக்கு கரோனா
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 4,462 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 4,462 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 4,462 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,70,392 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் புதிதாக 1,130 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 52 பேர் (அரசு மருத்துவமனை-31, தனியார் மருத்துவமனை-21) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,423 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்றை தினம் மட்டும் 5,083 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,17,403 பேர் குணமடைந்துள்ளனர். 42,566 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 95,538 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 85,84,041 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு தனியார் ஆய்வகத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ளன. அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 126.