அண்ணா பல்கலை. விவகாரம்: போடியில் திமுக ஆர்பாட்டம்
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதைக் கண்டித்து போடியில் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடுஅண்ணா பல்கலை. விவகாரம்: போடியில் திமுக ஆர்பாட்டம்
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதைக் கண்டித்து போடியில் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போடி: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதைக் கண்டித்து போடியில் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போடி அரசு பொறியியல் கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். தேனி மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பாஸ்கரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன், போடி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் எஸ்.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை மாற்ற வேண்டும், அண்ணா பல்கலை.யில் மாற்றம் செய்ய முயலும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களிலிருந்தும் திமுக தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.