முகப்பு
தமிழ்நாடு

வெற்றிவேல் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
பகிர்:

அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஸ்டாலிள் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அ.ம.மு.க. பொருளாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வெற்றிவேல் கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல் அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன்: கழகப்பொருளாளர் என் அருமை நண்பர் வெற்றிவேல் முன்னாள் எம்எல்ஏ மறைவு செய்தி கேட்டு கலங்கி நிற்கிறேன். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →